தீரன் சின்னமலையை நினைவுகூர்ந்த பாஜக – சோமனூரில் கருமத்தம்பட்டி மண்டலத்தின் சார்பில் நினைவு அஞ்சலி !

X
பாரதிய ஜனதா கட்சி கோவை வடக்கு மாவட்டம், கருமத்தம்பட்டி மண்டலத்தின் சார்பில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 220வது நினைவு தினம், நேற்று சோமனூர் பவர் ஹவுஸ் முன்பாக வீரவணக்கத்துடன் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, மண்டல, அணி, பிரிவு, சக்தி கேந்திரம், கிளைத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்வில் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
Next Story

