மன்னார்குடியில் கார் திருடிய கும்பலை தேடும் போலீஸ்

X
மன்னார்குடியில் மேலாளரை தாக்கி சொகுசு காரை பிடுங்கி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். மன்னார்குடியில் மேலாளரை தாக்கி சொகுசு காரை பிடுங்கி சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி குழந்தை இயேசு கோயில் அருகே உள்ள அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோசப் ஸ்டாலின்.இவர் புதுச்சேரியில் உள்ள எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது தாயார் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.இந்த நிலையில் அவரது நினைவு தினத்தை ஒட்டி, மன்னார்குடிக்கு வந்திருந்த ஜோசப் ஸ்டாலின் மன்னை நகர் பகுதியில் உள்ள அடக்க ஸ்தலத்தில், தனது தாயாரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அவரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மூன்று பேர்,ஜோசப் ஸ்டாலினை சரமாரியாக தாக்கினர். இதில் ஜோசப்ஸ்டாலின் மயங்கி விழுந்தார். அவரிடம் இருந்த செல்போன்,மணி பர்சையும் பிடுங்கி சென்றனர். மேலும் அவர் ஒட்டி வந்த ஹூண்டாய் ஐ 10 ரக சொகுசு காரையும் திருடி சென்றனர். இந்த நிலையில் அவர் மயக்கம் தெளிந்து எழுந்து அவ்வழியாக வந்தவர்களின் உதவியோடு, மன்னார்குடி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மன்னார்குடி நகர போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Next Story

