மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கேரம் போட்டி

மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கேரம் போட்டி
X
திண்டுக்கல்லில் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கேரம் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் புனித மரியன்னை மேல்நிலை பள்ளி அணியும், பெண்கள் பிரிவில் வத்தலகுண்டு மகாலட்சுமி மேல்நிலைப் பள்ளி அணியும் ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் பட்டம் என்று கோப்பையை கைப்பற்றின
திண்டுக்கல் தனியார் தொடக்கப்பள்ளியில் மாவட்ட கேரம் சங்கம் மற்றும் மதர் தெரசா லயன்ஸ் செல்லும் சார்பில் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கேரம் போட்டிகள் சங்கத் தலைவர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்றன. 13, 16 ,18, கீழ் என மூன்று பிரிவுகளாக ஆண் பெண் என தனி தனியாக போட்டிகள் நடைபெற்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டியில் திண்டுக்கல் நத்தம் ஒட்டன்சத்திரம் பழனி உள்ளிட்ட பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400 க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஒற்றையர், இரட்டையர் என லீக் முறையில் நடைபெற்ற போட்டிகளில் ஆண்கள் பிரிவில் 29 புள்ளிகள் பெற்று புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி 63 புள்ளிகள் பெற்று வத்தலகுண்டு மகாலட்சுமி மேல்நிலைப்பள்ளி அணியும் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்று கோப்பையை வென்றனர். மேலும் நடைபெற்ற விழாவில் கேரம் சங்க மாநில துணைத்தலைவர் காஜா மொய்தீன், மதர் தெரசா லையன் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு போட்டிகளில் முதல் நான்கு இடங்களை குறித்த மாணவ மாணவிகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். பயிற்சியாளர்கள், நடுவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் போட்டிகளை கண்டு ரசித்தனர்.
Next Story