மன்னார்குடி அருகே சுற்றுச்சாலை அமைக்க குளத்தை துருக்கக் கூடாது- பி.ஆர்.பாண்டியன்

மேலமறவாக்காடு கிராமத்தில் குளத்தை தூர்த்து சுற்றுச் சாலை அமைப்பதை நிறுத்த வலியுறுத்திய பி.ஆர்.பாண்டியன்
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடி அருகே மேலமறவாக்காடு கிராமத்தில் குளத்தை தூர்த்து சுற்றுச் சாலை அமைப்பதை நிறுத்த வலியுறுத்தி குளத்தை நேரில் பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழ்நாட்டில் சுற்றுச்சாலை அமைக்கிறோம் என்ற பெயரால் நீர் ஆதாரங்களை அபகரிப்பதை அனுமதிக்க முடியாது. சுற்றுசாலை அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை.ஆனால் மேலமறவாக்காட்டில் ஊராட்சிக்கு சொந்தமான வாத்திகுளத்தை அபகரித்து சாலை அமைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.இக்குளம் மன்னார்குடி நகர மக்கள் கஜா புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் முழுமையாக பயன்படுத்தி வருகின்றனர்.முன்கூட்டி திட்டமிடாத வகையில் தன் விருப்பத்திற்கு குளத்தை அபகரித்து மூன்று பிரிவுகளாக குளத்தை பங்கிட்டு சாலை அமைப்பதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.
Next Story