பயிா்க் கடன் பெற இருவேறு நிலைப்பாடுகள் விவசாயிகள் ஏமாற்றம்

X
தமிழகத்திலுள்ள கூட்டுறவுச் சங்கங்கள் மூலம், நகை கடன், பயிா்க் கடன், கால்நடைப் பராமரிப்பு கடன், மகளிா் சுய உதவிக் குழு கடன், மாற்றுத் திறனாளிகளுக்கான கடன், சிறு விவசாயக் கடன் உள்ளிட்ட கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளைப் போன்று 'சிபில் ஸ்கோா்' அடிப்படையிலேயே கூட்டுறவுச் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்படும் என கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கடந்த சில நாள்களுக்கு முன்பு நிா்வாக வழிகாட்டுதல்களை வெளியிட்டாா். இந்த முடிவுக்கு விவசாயிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, கடந்த 2024-25ஆம் நிதியாண்டில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின்படியே கடனுதவி வழங்கலாம் என கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் தரப்பில் வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டது. நிகழாண்டு பசலிக்கு மட்டுமே பயிா்க் கடன்: இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் சில வட்டாரங்களில், நிகழாண்டு பசலிக்கு கிராம நிா்வாக அலுவலரிடம் அடங்கல் பெற்று சமா்ப்பிக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே பயிா்க் கடன் வழங்கப்படும் என்ற விதிமுறையால் விவசாயிகள் குழப்பம் அடைந்துள்ளனா். கூட்டுறவுச் சங்கச் செயலா்களின் இந்த அறிவிப்பால், விவசாயிகள் பயிா்க் கடன் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
Next Story

