பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

X
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள குரும்பபட்டியில் பிரசித்தி பெற்ற மகாலட்சுமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதில் பக்தர்கள் விழாவின் முன்னதாக 15 நாட்கள் விரதம் இருந்து தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையால் உடலில் அடித்துக்கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது முன்னதாக மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை செய்த பின்னர் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. தேரில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களின் சேர்வை ஆட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சந்தைப்பேட்டை விநாயகர் கோவிலை வந்தடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் மீண்டும் அம்மனை கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு விரதம் இருந்த பக்தர்களின் தலையில் கோவில் பூசாரிகள் காலில் ஆணி செருப்பு அணிந்த வாரு தேங்காய் உடைத்தனர் இந்த நிகழ்ச்சியில் தேனி, மதுரை, நத்தம், வேடசந்தூர், பழனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆண்கள், பெண்கள் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Next Story

