கணவன் கண் முன்னே மனைவி பலி.

கணவன் கண் முன்னே மனைவி பலி.
X
மதுரை சோழவந்தான் அருகே கணவன் முன்னே மனைவி விபத்தில் பலியான சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்த காந்தி அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர் இன்று (ஆக.4) காலை தனது மனைவி உஷாவுடன் சோழவந்தான் பகுதியிலிருந்து தனது சொந்த ஊருக்கு மனைவியை அனுப்ப தனது டூவீலரில் கிளம்பினார். சோழவந்தான் பேட்டை அருகே சென்றபோது மதுரையிலிருந்து வத்தலகுண்டு செல்லும் அரசு பேருந்தில் தனது மனைவியை ஏற்றி விட இருசக்கர அந்த பேருந்தை முந்த முயன்ற போது நிலைதடுமாறி அதே பேருந்தின் பக்கவாட்டில் மோதி இருவரும் தடுமாறி அதே பேருந்து மீது மோதி பேருந்து சக்கரத்தில் விழுந்தனர். இதில் அவரது மனைவி மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அவரது கண் முன்னே மனைவி உஷா தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சோழவந்தான் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story