சமுதாய கூடத்தை திறந்து வைத்த அமைச்சர்
மதுரை சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளையம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2 2025-2026 கீழ் புதிதாக கட்டப்பட்டுள்ள பொது விநியோகக் கடை , மற்றும் எம்எல்ஏ நிதியிலிருந்து கட்டப்பட்ட கிராம சாவடியை மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று (ஆக.3) வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பாலமேடு (முதல்நிலை) பேரூராட்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டம் 2023-2024 கீழ் -வார்டு எண் 10ல் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடத்தை மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்வுகளில் வெங்கடேசன் எம்எல்ஏ, திமுக முக்கிய நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






