ஆட்டோ டிரைவர் படுகொலை.

X
மதுரை அருகே கள்ளந்திரியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்லபாண்டி (26) சில நாட்களுக்கு முன் ஆட்டோ வாங்குவதற்காக இவரது அம்மா கொடுத்த பணத்தை நண்பர்களிடம் கொடுத்துள்ளார். அவர்கள் திருப்பித் தர மறுக்கவே தகராறில் ஈடுபட்டார். பின் கடன் பெற்று ஆட்டோ வாங்கிய போது ஆர்.சி.,புத்தகம் நண்பர் பெயரில் இருந்தது தெரிந்தது. இதனால் அதை மாற்றித் தர மீண்டும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று (ஆக.3) இரவு 10:00 மணியளவில், அலைபேசி அழைப்பு வந்ததையடுத்து வீட்டிலிருந்து வெளியில் வந்த செல்லபாண்டி கள்ளந்திரி பேருந்து நிறுத்தம் பழக்கடை அருகே நின்றிருந்தார் . அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நால்வர் வெட்டிக் கொலை செய்து தப்பினார்கள்.போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story

