ஆடிபெருக்கு திருவிழாவையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
Komarapalayam King 24x7 |4 Aug 2025 4:26 PM ISTஆடிபெருக்கு திருவிழாவையொட்டி குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆடிபெருக்கு திருவிழாவையொட்டி குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமிகள் வலம் வந்தனர். இதே போல் காளியம்மன் கோவில், சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், தேவாங்கர் மாரியம்மன் கோவில், ஓலப்பாளையம் வீரமாத்தியம்மன் கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் புருஷோத்தம பெருமாள் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், சேலம் சாலை முனியப்பன் கோவில், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், போலீஸ் ஸ்டேஷன் அருகே பாலமுருகன் கோவில், கோட்டைமேடு சிவன் கோவில், கத்தேரி சமத்துவபுரம் அருகே உள்ள சிவபுரம் சிவன் கோவில், கள்ளிபாளையம் சிவன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன. ஓலப்பாளையம் வீரமாத்தியம்மன் கோவில் சார்பில் காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வீரமாத்தியம்மன் சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தவாறு வந்தார். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற்ற அம்மனுக்கு பொங்கல் வைத்து, படையலிட்டு வணங்கினர்.
Next Story


