குடியிருப்பு சங்க அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்த எம் எல் ஏ
மதுரை அவனியாபுரம் பெரியசாமி நகர், திருப்பதி நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் ஒன்றிணைந்து பெரியசாமி நகர் குடியிருப்போர் நலச் சங்கம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று (ஆக.3)குடியிருப்பு நல சங்கத்திற்கு சொந்த கட்டிடத்தை திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமை ஏற்று திறந்து வைத்தார் இதில் எம்எல்ஏ ஒவ்வொரு பகுதியிலும் இதுபோன்ற சங்க கட்டிடங்களை நல்ல முறையில் பராமரித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது மிகவும் கடினமான காரியம் ஒரு கட்சியை கூட வளர்த்து விடலாம் ஆனால் சங்க கட்டிடம் வளர்ப்பது மிகச் சிரமம் என்று கூறினார் .புதிய குடியிருப்போர் நல சங்க விழாவிற்கு மன்ற உறுப்பினர்கள் கருப்பசாமி அய்யனார் காவல் துறை அதிகாரிகள்,சங்க நிர்வாகிகள், குடியிருப்புவாசிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story





