நம் பாரத சேவை தொண்டு நிறுவனத்தின் சார்பில் சமூக நீதிப் போராளி விருது பெற்ற விசிக மாவட்ட செயலாளர் ஆ.நீல வானத்து நிலவன்...

X
Rasipuram King 24x7 |4 Aug 2025 8:39 PM ISTநம் பாரத சேவை தொண்டு நிறுவனத்தின் சார்பில் சமூக நீதிப் போராளி விருது பெற்ற விசிக மாவட்ட செயலாளர் ஆ.நீல வானத்து நிலவன்...
நம் பாரத சேவை என்ற தொண்டு நிறுவனத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் நலனின் அக்கறை கொண்ட பொது நல சேவைகள் செய்து வரும் சமூக ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் மக்கள் சேவைக்கு ஏற்ப விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது அந்த வகையில் கடந்த கால் (25) நூற்றாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட விளிம்பில் நிலை மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை உரிமைகளை மீட்டெடுப்பதற்காக தொடர்ந்து களமாடி போராடி வருவதாலும் குறிப்பாக சமீபத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இரா.புதுப்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள துலுக்க சூடாமணி மாரியம்மன் கோவிலில் பட்டியல் இன மக்களுக்கு கட்டளை பெற்று தந்ததற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - நாமக்கல் மையம் மாவட்ட செயலாளர் ஆ. நீல வானத்து நிலவன் அவர்களுக்கு நம் பாரத சேவை தொண்டு நிறுவனத்தின் சார்பில் சமூக நீதிப் போராளி என்ற விருதை வழங்கி சிறப்பித்துள்ளனர். சென்னை வண்டலூரில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திரு. பால சரவணன் அவர்களின் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக திரைப்பட இயக்குனர்கள் ஆர். கே.செல்வமணி, பேரரசு ஆகியோர் கலந்து கொண்டு விருந்தினை வழங்கினர். இந்த விருதுகளை பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - நாமக்கல் மையம் மாவட்ட செயலாளர் ஆ. நீல வானத்து நிலவன் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும், மற்றும் கட்சி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Next Story
