கும்பகோணம் நவகன்னிகைகள் அம்மனுக்கு அபிஷேகம்

கும்பகோணம் நவகன்னிகைகள் அம்மனுக்கு அபிஷேகம்
X
பக்தி
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மகாமககுளம் அருகே நவகன்னிகைகள் ஸ்தலம் ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத காசி விசுவநாதா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆடிப்பெருக்கு நாளன்று நவகன்னியா் மகாமக குளத்தில் நீராடி, ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத காசி விசுவநாத சுவாமியை தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில் நவகன்னிகையா் ஆடிப்பெருக்கை முன்னிட்டு மகாமக குளத்தில் நீராடி காசிவிசுவநாதரை தரிசனம் செய்த வைபவம் நடைபெற்றது. முன்னதாக நவ கன்னிகையருக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது.
Next Story