வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு : முதல்வர் பெருமிதம்

வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு : முதல்வர் பெருமிதம்
X
இந்தியாவில் வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்தியாவில் வாகன உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தூத்துக்குடியில் வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின் வாகன உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்து காரில் கையெழுத்திட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், மின்சார வாகன உற்பத்தியில் இந்தியாவின் தலைநகர் தமிழ்நாடுதான். நாட்டின் ஒட்டுமொத்த மின்சார வாகன உற்பத்தியில் 40 சதவிகிதம் தமிழ்நாட்டில்தான் உற்பத்தி ஆகிறது. நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற 200 பேர் இந்த ஆலையில் பணிபுரிய உள்ளனர். இந்த தொழிற்சாலை மூலம் தூத்துக்குடி மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த 90 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று தெரிவித்தார். விழாவில்,தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ் தூத்துக்குடி எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story