கிருஷ்ணகிரி: புத்தக சிந்தனை போட்டியில் முதலிடம் பிடித்த மாணவிகளுக்கு காசோலை வழங்கிய கலெக்டர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், பள்ளிக்கல்வித்துறை இணைந்து பள்ளி மாணவர்களிடையே நடத்திய புத்தாக்க சிந்தனைகளுக்கான போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த 3 மாணவிகளுக்கு ரூ.1 இலட்சத்திற்கான காசோலை, மற்றும் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று வழங்கினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ், மாவட்ட திட்ட மேலாளர் (தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) சிவபாரதி உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story

