பெண்ணை தாக்கிய அரசு ஆசிரியர் மீது வழக்கு

X
குமரி மாவட்டம் திருவட்டார் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது சித்தப்பா பராமரிப்பில் இருந்த சித்தப்பா மாணிக்கம் என்பவர் இறந்த போது, உடலை வீட்டின் அருகே தகனம் செய்துள்ளார். இதற்கு பக்கத்து வீட்டை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் சுந்தரதாஸ் என்பவர் எதிர்ப்பு தெரிவித்து தகராறு செய்துள்ளார். இந்த விரோதத்தில் விஜயனின் மனைவி வசந்தா மற்றும் மகள் முன்பு சுந்தர தாஸ் ஆபாச சைகை காட்டி தகாத வார்த்தை பேசியதால் எஸ்பி உத்தரவின் பேரில் திருவட்டார் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரதாஸ் வசந்தாவை தாக்கினார். திருவட்டார் போலீசார் அரசு ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

