கோவை: மாசாணி அம்மன் கோவிலில் விமல் சுவாமி தரிசனம் - வடம் திரைப்பட பூஜை !

ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் நடிகர் விமல் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை நடைபெற்றது.
ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் என்பதால் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியேறிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் இந்நிலையில் ஆடி 18 முன்னிட்டு கோவிலில் நடிகர் விமல் மற்றும் புதிய கதாநாயகி சங்கீதா ஆகியோர் வருகை புரிந்து கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து 18 வகையான மூலிகை.அபிஷேகங்கள் அபிஷேகங்கள் நடைபெற்ற பின்னர் சிறப்பு தரிசனம் செய்தனர் இதனைத் தொடர்ந்து மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள தோட்டத்தில் வடம் திரைப்படத்துக்கு பூஜை நடைபெற்றது இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் டைரக்டர் மற்றும் டெக்னீசியன் கலந்து கொண்டனர் மேலும் அங்கு வந்த பக்தர்களுக்கு விமல் மற்றும் புதிய பட கதாநாயகி சங்கீதா ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.
Next Story