கோவை: அனுமதியின்றி இயங்கும் பைக், டாக்சி சேவைகள் மீது தடை கோரி போராட்டம் !

கோவை: அனுமதியின்றி இயங்கும் பைக், டாக்சி சேவைகள் மீது தடை கோரி போராட்டம் !
X
கோவை மாவட்ட ஆட்சியரிடம், அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகளை தடை செய்ய கோரி, ஆட்டோ மற்றும் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியரிடம், அனுமதியின்றி இயங்கும் Ola, Uber, Rapido, Red Taxi உள்ளிட்ட நிறுவனங்களின் சேவைகளை தடை செய்ய கோரி, ஆட்டோ மற்றும் சுற்றுலா வாடகை வாகன ஓட்டுநர்கள் மனு அளித்தனர். அவர்கள் அளித்த மனுவில், சட்ட விதிகளை மீறி இந்நிறுவனங்கள் பைக் மற்றும் கார் டாக்சி சேவையை வழங்கி வருவதாகவும், இதனால் அரசு விதிமுறைகளை பின்பற்றி இயங்கும் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், சொந்த பயன்பாட்டிற்கான வாகனங்களை வாடகைக்காக மாற்றி இயக்கும் செயல்பாடுகளும், Red Taxi நிறுவனம் வாகன மேல் கூரையில் சிவப்பு பூச்சுடன் விளம்பர சேவையை மேற்கொள்வதும் சட்டவிரோதம் என அவர்கள் கூறினர். ONROADZ, Zoom Car, Bla Bla Car உள்ளிட்ட ஆப் நிறுவனங்களும் இதேபோல் விதிகளை மீறி செயல்படுவதாகவும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில் பைக் டாக்சிகள் தடை செய்யப்பட்டுள்ளதை மையமாகக் கொண்டு, கோவையிலும் இத்தகைய சேவைகளை தடை செய்யக்கோரி அவர்கள் வலியுறுத்தினர்.
Next Story