சூலூரில் சோள விதைப்பண்ணை, சொட்டுநீர் பாசன திட்டம் – ஆட்சியர் நேரில் பார்வை !

X
கோவை மாவட்டம் சூலூர் அருகே பீடம்பள்ளி கிராமத்தில், வேளாண்மை துறையின் தலைமையில் 5 ஏக்கரில் K12 சோள விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 30 கிலோ சோள விதைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல், இருகூர் பகுதியில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் சொட்டுநீர் பாசன வசதி உருவாக்கப்பட்டு, ரூ.98,720 மானியம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் வேளாண்மைத் துறை அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர். விவசாய உற்பத்தி மற்றும் நீர் மேலாண்மை மேம்பட இது உதவும் என ஆட்சியர் தெரிவித்தார்.
Next Story

