பிடாரி ஸ்ரீ சேற்றுக்கால் செல்லியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா

X
பிடாரி ஸ்ரீ சேற்றுக்கால் செல்லியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு பிடாரி ஸ்ரீ சேற்றுக்கால் செல்லியம்மன் திருக்கோவிலில் ஆடி மாத திருவிழா கடந்த முதல் செவ்வாய்க்கிழமை அன்று காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது செவ்வாய்க்கிழமை இன்று அருள்மிகு பிடாரி ஸ்ரீ சேற்றுக்கால் செல்லியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சேற்றுக்கால் செல்லியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஸ்ரீ சேற்றுக்கால் செல்லியம்மனுக்கு மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு ஊரணி பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டு சென்றனர். மதுராந்தகம் ஸ்ரீ சேற்றுக்கால் செல்லியம்மன் ஆலய ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

