மதுராந்தகம் அருகே ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம் எம்எல்ஏ பங்கேற்பு!

மதுராந்தகம் அருகே ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம்  எம்எல்ஏ பங்கேற்பு!
X
மதுராந்தகம் அருகே ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!
மதுராந்தகம் அருகே ஆறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்கம் க. சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே கள்ளபிரான்புரம் ஊராட்சியில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் ஆறு கோடி மதிப்பீட்டில் கள்ளபிரான்புரம், வள்ளுவபாக்கம், நெய்குப்பி, சூரை சித்தாலமங்கலம் வரை ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை முழுமையாக சேதம் அடைந்து வந்த நிலையில் அப்பகுதி மக்கள் புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்த நிலையில் மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா தனசேகர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய கழக செயலாளர் பட்டாளம் சத்தியசாய் ஆகியோர் கலந்து கொண்டு புதிய தாசலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என க. சுந்தர் எம்எல்ஏ அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story