க.பரமத்தி- கணவன் மனைவி சென்ற டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.

க.பரமத்தி- கணவன் மனைவி சென்ற டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து.
க.பரமத்தி- கணவன் மனைவி சென்ற டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து. கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி தாலுகா , புஞ்சை காளக்குறிச்சி அருகே எல்லைமேட்டுபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் வயது 55. இவரது மனைவி இந்திராணி வயது 50. இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி காலை 6:30- மணி அளவில் கோவை - கரூர் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். இவர்களது வாகனம் க.பரமத்தி பவர் கிரீட் அருகே சென்றபோது , எதிர் திசையில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் செல்வகுமார் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்று விட்டது . இந்த விபத்தில் வாகனத்துடன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் கணவன் - மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக செல்வகுமார் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , மோதிவிட்டு நிற்காமல் சென்ற அந்த வாகனம் எது ? அதன் ஓட்டுனர் யார் ? என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர் க.பரமத்தி காவல்துறையினர்.
Next Story