ராமனூரில் டூ வீலரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து.

ராமனூரில் டூ வீலரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து.
ராமனூரில் டூ வீலரை வேகமாக இயக்கியதால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து. கரூர் ஜே ஜே நகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் வயது 41. இவர் ஆகஸ்ட் 4ஆம் தேதி அதிகாலை 5:30 மணி அளவில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமானுர் பகுதியில் இருந்து காந்தி கிராமம் செல்லும் சாலையில் அவரது எலக்ட்ரிக் டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் அப்பகுதியில் உள்ள தனியார் தியேட்டர் அருகே சென்றபோது டூ வீலரை வேகமாக இயக்கியதால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது செந்தில்குமார்க்கு' உடனடியாக அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த செந்தில் குமாரின் மனைவி ரத்தினம்மாள் வயது 37 என்பவர் அளித்த புகாரில் , சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய செந்தில்குமார் மீது வழக்கு பதிவு செய்தனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.
Next Story