பதினோராம் வகுப்பு மாணவன் முகிலன் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பதினோராம் வகுப்பு மாணவன் முகிலன் உடலை அவரது  பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
X
பதினோராம் வகுப்பு மாணவன் முகிலன் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் பதினோராம் வகுப்பு மாணவன் முகிலன் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்புடன் சொந்த ஊரான கொத்தூர் பகுதிக்கு எடுத்துச் சென்றனர். மாணவன் தாயார் நளினி மற்றும் அவரது தந்தை சின்னத்தம்பி ஆகியோர் வாகனம் முன்பு கட்டப்பட்டிருந்த முகிலன் புகைப்படத்துடன் பேனரை படத்திற்கு முத்தம் கொடுத்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர் இச்சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் இருக்கக்கூடிய பொதுமக்களிடையே கண் கலங்க செய்தது ‌‌ திருப்பத்தூர் அருகே நிதி உதவி பெறும் பள்ளி மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்த 11ஆம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்!இரண்டாவது நாளாக பள்ளிக்கு விடுமுறை! உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி இவரது மகன் முகிலன் இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் மாணவர் விடுதியில் தங்கி பதினோறாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவன் கடந்த 1 ஆம் காணாமல் போனதாக பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் கூறிய நிலையில் அதிர்ந்து போன பெற்றோர்கள் எனது மகனை காணவில்லை என திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் இரண்டு நாட்களாக தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் அதே பள்ளியில் உள்ள மூடப்பட்டிருந்த கிணற்றில் மோப்பநாய் உதவியுடன் மாணவன் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அறிந்த பெற்றோர்கள் கத்தி கதறி அழுதனர் பள்ளியில் உள்ள கிணற்றின் முகப்பு இரும்பு கம்பியில் பூட்டப்பட்டிருந்த நிலையில் எவ்வாறு அந்த கிணற்றில் விழுந்தான் என பெற்றோர்கள் கேள்வியும் எழுப்பினர். இந்த நிலையில் பள்ளியை மூட வேண்டும் மேலும் பாதிரியாரை கைது செய்ய வேண்டும் தனது மகன் சாவிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பல்வேறு கட்சிகளுடன் இணைந்து சாலை மறியல் மற்றும் திருப்பத்தூர் நகர காவல் நிலையம் முற்றுகை என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் மாணவன் முகிலனுடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்தனர். மேலும் பாதிரியாரை கைது செய்து பள்ளிக்கு சீல் வைக்க வேண்டும் என கூறி மூன்று நாட்களாக போராட்டத்தில் உறவினர்களை ஈடுபட்டு வந்ததால் டிஐஜி மற்றும் எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக இன்று உடலை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும் இரண்டாவது நாளான இன்று பள்ளிக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் இன்று முடிவுக்கு வரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story