பொறியாளர் மரணம் : அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

X
சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்ககத்திலிருந்து தலைமைப் பொறியாளர் வெங்கடேசன் தூத்துக்குடி மாவட்டத்தில் 28.07.2025 மற்றும் 29.07.2025 ஆகிய தினங்களில் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். கள ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை பொறியியல் பிரிவு அலுவலர்கள் மற்றும் பிற பணியாளர்களை மிக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி அனைவரையும் சகட்டு மேனிக்கு திட்டி தீர்த்துள்ளார். இதனால் பொறியியல் பிரிவில் உள்ள அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தனர். இந்நிலையில் 31.07.2025 அன்று விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய பொறியாளர் சு.அலெக்ஸாண்டர் என்பவர் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி மாரடைப்பால் மரணமடைந்தார். எனவே, சு. அலெக்ஸாண்டர் அவர்களின் மரணத்திற்கு காரணமான ஊரக வளர்ச்சித்துறை தலைமை பொறியாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட செயற் பொறியாளர் அ.முருகன் ஆகியோரை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தூத்துக்குடி மாவட்ட மையத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story

