டூவீலர் வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை

டூவீலர் வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை
X
மதுரை பேரையூர் அருகே டூவீலரை வாங்கித் தராததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை மாவட்டம் பேரையூர் எம்.புளியங்குளத்தை சேர்ந்த பெருமாளின் மகன் சக்திவேல் (24) என்பவர் வேன் டிரைவராக உள்ளார். இவர் ஆடி 18ல் தனக்கு டூவீலர் எடுத்து தர வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டுள்ளார் .கொஞ்ச நாள் கழித்து வாங்கி தருவதாக பெற்றோர் கூறியுள்ளனர். நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டி தனது மூத்த சகோதரருக்கு வாட்ஸ் ஆப்பில் 'சாரிடா, மிஸ் யூ டா' என குறுஞ்செய்தி அனுப்பி விட்டு நேற்று (ஆக.4) வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து வில்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
Next Story