ராணுவ வீரர் விஷம் அருந்தி தற்கொலை

X
மதுரை மாவட்டம் எழுமலை அருகே சங்கரலிங்காபுரத்தை சேர்ந்த முனியாண்டி ( 35) என்பவர் கடந்த 2010ல் ராணுவத்தில் சேர்ந்து தற்போது நாசிக் பகுதியில் பணிபுரிகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவர் கடந்த ஜூன் 3 ல், ஒன்றரை மாத விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். குடும்பத்தினர்களுக்கிடையே சொத்து பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளால் மனவருத்தத்தில் இருந்தவர் விரக்தியில் வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து டி.ராமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

