மூட்டை தூக்கும் தொழிலாளி மயங்கி விழுந்து பலி

மூட்டை தூக்கும் தொழிலாளி மயங்கி விழுந்து பலி
X
குமாரபாளையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளி மயங்கி விழுந்து பலியானார்.
குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் வசிப்பவர் வெங்கடேஷ், 45. மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர் நேற்றுமுன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். நேற்றுமுன்தினம் காலை 11:15 மணியளவில் சுந்தரம் நகர் பகுதியில் லாரியில் மூட்டை இறக்க சென்ற போது, திடீரென்று, லாரியில் உள்ள மூட்டை மீது மயங்கி விழுந்தார். உடனே இவரை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இவரை பரிசோதித்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து இவரது மனைவி சாந்தி, 35, குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். குமாரபாளையம் போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story