அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆலோசனை கூட்டம்

X
Komarapalayam King 24x7 |5 Aug 2025 7:22 PM ISTகுமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டுதல், வேலை வாய்ப்பு மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் இணைந்து எதிர்கால வாய்ப்புகள் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் ஜெயவேல் வரவேற்றார். கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமை வகித்தார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா பங்கேற்று, மாணவர்களுக்கு எந்த வகையில் எதிர்கால வாய்ப்புகள் உள்ளது? எவ்வாறு திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும், என்று பேசினார். பாடத்திட்டத்தோடு மாணவர்கள் நிறுவனங்களுக்கு ஏற்றவாறு, ஆளுமைகளை வளர்த்து கொள்ள வேண்டும் என்று பேசினார். மாவட்ட தொழில் முனைவோர் வளர்ச்சி மையம் திட்ட அலுவலர் வாசுதேவன் பங்கேற்று, சுயவேலைவாய்ப்பு என்ற தலைப்பில், தொழில் முனைவு நடைமுறைகள் யாவை? அதற்கு தேவையான சட்ட விதிமுறைகள் என்ன? எவ்வாறு திட்டங்கள் தீட்ட வேண்டும், தொழிலுக்கு தேவையான நிதியை எவ்வாறு ஏற்படுத்தலாம், என்று பேசினார். மூன்றாம் ஆண்டு வணிகவியல் மாணவி மீனா நன்றி கூறினார். பேராசிரியர்கள் ரகுபதி, ரமேஷ்குமார், ஞானதீபன் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
