கிருஷ்ணகிரி: சாலையில் தவறி விழுந்து ஓட்டல் தொழிலாளி உயிரிழப்பு.

கிருஷ்ணகிரி: சாலையில் தவறி விழுந்து ஓட்டல் தொழிலாளி உயிரிழப்பு.
X
கிருஷ்ணகிரி: சாலையில் தவறி விழுந்து ஓட்டல் தொழிலாளி உயிரிழப்பு.
கர்நாடக மாநிலம் தெங்காடியூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்தபா (36) இவர் கிருஷ்ணகிரி-ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு உணவக கடையில் வேலை பார்த்து வந்தார். சம்வம் அன்று அவர் தாளாப்பள்ளி அருகே நடந்து சென்றார். அப்போது எதிர்பாரதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் அவர் படுகாயம் ஏற்பட்டது. இதை அடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி பிரகாஷ்தபா உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story