பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி செய்வது குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். -----

பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி செய்வது குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். -----
X
பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி செய்வது குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். -----
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்;ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பட்டாசு விபத்துக்களை தடுக்கும் பொருட்டு, பட்டாசு தொழிற்சாலை சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பாதுகாப்புக்குழு கூட்டத்தில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் பாதுகாப்பான பட்டாசு உற்பத்தி செய்வது குறித்து அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்கள். இக்கூட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படும் குழு ஆய்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பட்டாசு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு சம்பந்தமான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், தொழிலாளர்களின் உடலுக்கோ, உயிர்க்கோ பாதுகாப்பற்ற சூழல் ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் பட்டாசு உற்பத்தி பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், விபத்து இல்லாத சூழ்நிலையை பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் பட்டாசு தொழிற்சாலை சங்க பிரதிநிதிகளிடம் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் அறிவுறுத்தினார்கள். அரசு அலுவலர்கள் பட்டாசு தொழிற்சாலை நிர்வாகத்தினரிடமிருந்து தடைவிலக்கு ஆணை பெறுவதற்கான விண்ணப்பம் பெறப்பட்டவுடன் உடனுக்குடன் பரிசீலித்து, மீண்டும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பணிகள் தொடங்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்கள். மேலும், எதிர் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் அதிக பட்டாசு உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாலும், விதிமீறல்களால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாலும், அதனை தவிர்க்கும் பொருட்டு மிகுந்த பாதுகாப்புடனும் விதிமுறைகளை பின்பற்றியும், பட்டாசு உற்பத்திகளை மேற்கொள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்தார்கள்.
Next Story