மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ

மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ
X
மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் சார்பில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், தமிழ்நாட்டிலுள்ள கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சிறப்பு சுயஉதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை வகுத்து, சமூகத்தில் அவர்கள் பாதுகாப்புடன் கண்ணியமான முறையில் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் செயல்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர்களின் தேவைகள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு முன்னெடுப்புகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ளவர்களில் முதற்கட்டமாக, 324 பெண்களிடம் சிறப்பு கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையானவை குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர்களின் தேவைகளை கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுக்கும் வகையில், இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் முதற்கட்டமாக கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 102 பெண்கள் கலந்து கொண்டு, பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அளித்து, தங்களின் குறைகளை தெரிவித்தனர். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
Next Story