அன்னை சித்தர் ராஜ்குமார் குருஜியின் ஐந்தாம் ஆண்டு குருபூஜை விழா

X
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 08 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று திருவோண நட்சத்திரத்தில் பிரம்மரிஷி மலை ஸ்ரீலஸ்ரீ காகபுஜண்டர் தலையாட்டி சித்தர் ஆசிகளுடன் , பிரம்மரிஷி மலை ஸ்ரீலஸ்ரீ அன்னை சித்தர் இராஜகுமார் குருஜியின் 5 ஆம் ஆண்டு குருபூஜை விழாவானது சிறப்பாக நடைபெற உள்ளது, அதை முன்னிட்டு குருபூஜை அன்று காலை 05 மணிக்கு வடலூர் தெய்வ நிலைய சன்மார்க்க அன்பர்கள் கலைமாமணி வில்லிசை வேந்தர் கிஷோர்குமார் மற்றும் பெரம்பலூர் சன்மார்க்க சங்க தலைவரும், அரசு வழக்கறிஞர் சுந்தர்ராஜன் குழுவினர் நடத்தும் திருஅருட்பா பாராயணம், 06 மணிக்கு கோமாதா பூஜை ,அஸ்வ பூஜையுடன் அ/மி ஸ்ரீ காகன்னைஈஸ்வருக்கு சிறப்பு தீபாராதனையும், காலை 08 மணிக்கு அன்னதானமும் நடைபெறும், பின் காலை 09 மணி முதல் மதியம் 12 மணி வரை சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் பாராயணமும், கைலாய பூதகண சிவ வாத்தியத்துடன், சித்தர் பஜனைகள், ஆன்மீக சொற்பொழிவும், மாதாஜி ரோகிணி ராஜகுமார் தலைமையிலும், தவயோகிகள் சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவசிநாதன் சுவாமிகள் சிங்கப்பூர் மலேஷியா மெய்ன்பர்கள் முன்னிலையில் 210 மகா சித்தர்கள் யாகம், மகா பூர்ணாஹூதியும் அன்னை சித்தர் சமாதியில் ஜோதி வழிபாடும் நடைபெறும், பகல் 01 மணிக்கு பல நூற்றுக்கும் மேற்பட்ட சாது சந்நியாசிகளுக்கு மகேஸ்வர பூஜையும், வஸ்த்திர தானமும், மாற்றுத்திறனாளிகள் மூன்று நபர்களுக்கு சிலிண்டர் இஸ்திரி பெட்டியும், எளம்பலூர் அரசு பள்ளியில் நடப்பாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவச் செல்வங்களுக்கு பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது, இந்த மாபெரும் குருபூஜை விழாவில் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அன்னை சித்தரின் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்க, மற்றும் உள்ளூர் ,வெளியூர் எளம்பலூர், பெரம்பலூர் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர், *ஆயிரக்கணக்கான மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை மகா சித்தர்கள் அறக்கட்டளை மற்றும் பிரம்மரிஷி மலை அன்னை சித்தர் டிவைன் சாரிட்டபுள் டிரஸ்ட் மெய்யன்பர்கள் செய்து வருகின்றனர்.
Next Story

