மீன்சுருட்டி அண்ணா நகர் பகுதி மக்களிடம் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆக்கிரமிப்பு அறிவிப்பானையை வாபஸ் பெற தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் எம்எல்ஏவிடம் மனு.

மீன்சுருட்டி அண்ணா நகர் பகுதி மக்களிடம் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆக்கிரமிப்பு அறிவிப்பானையை வாபஸ் பெற தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் எம்எல்ஏவிடம் மனு.
X
மீன்சுருட்டி அண்ணா நகர் பகுதி மக்களிடம் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்ட ஆக்கிரமிப்பு அறிவிப்பானையை வாபஸ் பெறவும், பட்டா வழங்க வலியுறுத்தியும் பகுதி மக்கள் சார்பில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஜெயங்கொண்டம் எம் எல் ஏ விடம் மனு அளித்தனர்.
அரியலூர், ஆக.5- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மீன்சுருட்டி அண்ணா நகரில் சுமார் 50 ஆண்டுகளாக குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களின் வீடுகள் ஆக்கிரமிப்பாளர்கள் என கூறியும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறியும் ஜெயங்கொண்டம்  ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் ஏழை எளிய மக்களிடம் வழங்கப்பட்ட அறிவிப்பானையை வாபஸ் பெற வலியுறுத்தியும், ஏழை எளிய மக்களுக்கு பட்டா வழங்கிட உரிய பரிந்துரை செய்ய வலியுறுத்தியும் மீன்சுருட்டி அண்ணா நகர் பகுதி மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மணிவேல் தலைமையிலான குழுவினர்  ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணனன் வீட்டிற்கு சென்று நேரடியாக சந்தித்து மனு அளித்தனர்.மனுவைப் பெற்றுக் கொண்ட ஜெயங்கொண்டம் எம் எல் ஏ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து அனுப்பி வைத்தார்.
Next Story