கந்தம்பாளையம் அருகே மது போதையில் கிணற்றில் விழுந்து ஒருவர் பலி.

கந்தம்பாளையம் அருகே மது போதையில் கிணற்றில் விழுந்து ஒருவர் பலி.
X
கந்தம்பாளையம் அருகே மது போதையில் கிணற்றில் விழுந்து ஒருவர் பலியானார்.
பரமத்தி வேலூர். ஆகஸ்ட். 5: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சுங்கக்காரன்பட்டியை சேர்ந்தவர் மூர்த்தி (35) டிரைவராக வேலை செய்து வந்தார். மூர்த்திக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகின்றது . மோகனா (31 )என்ற மனைவியும் பிரதக்ஷனா (8) பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் திங்கட்கிழமை மாலை கூடச்சேரி செல்வதாக மனைவியிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் மூர்த்தியின் மனைவி கூடச்சேரி பகுதியில் தெரியபோது மூர்த்தி  மது அருந்திவிட்டு நடுப்புதூரில் சுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான கிணற்றின் திட்டுசுவரில் போதையில் படுத்து உறங்கியவர் நிலை தடுமாறி கிணற்றில் விழுந்தது தெரியவந்துள்ளது. கிணற்றின் அருகில் மூர்த்தியின் செருப்பு இருந்ததால் சந்தேகம் அடைந்து நாமக்கல் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புகள் துறையினர் கிணற்றில் தேடிப் பார்த்ததில் கிணற்றில் இறந்த நிலையில் மூழ்கியவாறு இருந்த மூர்த்தியின் உடலை தீயணைப்புத் துறையினர் மீட்டு மேலே எடுத்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் மூர்த்தியின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story