சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு ஐந்தாண்டு கடுங்காவல் தண்டனை. கரூர் மாவட்டம் குளித்தலை பெரிய பாலம் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் 9 வயது சிறுமி. அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் வயது 27. இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி சிறுமியின் வீட்டிற்கு சென்று அவரது தாயாரிடம் தன்னுடைய புறா உங்கள் வீட்டு மாடியில் இருப்பதால் அதை பிடிக்க அனுமதி கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். சிறுமியின் தாயாரும் அனுமதி கொடுத்துள்ளார். ஆனால் அதே நேரம் பிரகாஷ் வீட்டிற்குள் சென்றதும் சிறுமியிடம் அத்துமீறி உடலுறவு கொள்ள சிறுமியின் அந்தரங்க உறுப்புகளை தொட்டு கட்டாயமாக முத்தம் கொடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டார்.அப்போது சிறுமியை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து, இது தொடர்பான வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நேற்று நீதிபதி தங்கவேல் குற்றம் செய்த பிரகாசுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 5-ஆண்டு சிறை தண்டனையும் , ரூபாய் ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மாத காலத்திற்குள் ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து குற்றவாளி பிரகாஷை பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.
Next Story




