அரசு கலை அறிவியல் கல்லூரியில் மேலாண்மைக்குழு கூட்டம்

X
Komarapalayam King 24x7 |5 Aug 2025 9:16 PM ISTகுமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மேலாண்மைக்குழு கூட்டம் நடந்தது.
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்லூரி கல்வி ஆணையர் அறிவுறுத்தலின்படி கல்லூரி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டு அதன் முதல்கூட்டம் கல்லூரி முதல்வர் (பொ) சரவணாதேவி தலைமையில் நடந்தது. இதில் அதிக அளவிலான மாணவர் சேர்க்கைக்கு தீவிர துண்டு பிரசுரம், பிளெக்ஸ் பேனர்கள் வைத்து பிரச்சாரம் செய்தல், ஆட்டோ விளம்பரம் செய்தல், போதுமான வகுப்பறைகள், ஆய்வு கூடங்கள், போதுமான ஆசிரியர் நியமனங்கள், விளையாட்டு மைதானம் மேம்பாட்டு பணிகள், விளையாட்டு உபகரணங்கள் வாங்கி வைத்து, மாணவர்களை விளையாட சொல்லுவது, போதுமான விளையாட்டு பயிற்சி வழங்கி, பல்வேறு போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பது, பல்வேறு விழிப்புணர்வு பேரணிகள் நடத்துவது, பாடத்திட்டம் சம்பந்தமாக அடிக்கடி கருத்தரங்கங்கள் நடத்தி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, பொதுநல அமைப்பினருடன் சேர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்துதல், போட்டி தேர்வுகளில் மாணவர்கள் வெற்றி பெற, தகுந்த பேச்சாளர்களை அழைத்து வந்து பேச வைப்பது, என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொழில் அதிபர்கள் தனசேகரன், ஸ்ரீகுமார், மகாலிங்கம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, விடியல் ஆரம்பம் அமைப்பாளர் பிரகாஷ், தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு மையம் ஒருங்கிணைப்பாளர் ஜெயவேல், பேராசிரியர் .இரகுபதி மற்றும் கல்லூரி மாணவி கல்பனா, உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
