அரியலூர் அரசு மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாட்டம்

X
அரியலூர், ஆக.5 - அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை குழந்தைகள் நலப் பிரிவில், ரோட்டரி சங்கம் சார்பில் உலகதாய்ப்பால் வார விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, ரோட்டரி சங்கத் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயலர் பிரபு சங்கர் முன்னிலை வகித்தார். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை அலுவலர் கொளஞ்சிநாதன் கலந்து கொண்டு பேசுகையில், மாறிவரும் சமுதாயச் சூழலில் தாய்ப்பால் கொடுப்பதில் தாய்மார்கள் பல்வேறு சங்கடங்களை சமாளிக்க வேண்டியுள்ளது. ஆனாலும் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால்களை கொடுப்பதில் இருந்து தவறவிடக் கூடாது. குழந்தைகளுக்கு குறைந்தப்பட்ச 2 வயது வரையும் அதன் பின்னரும் தாய்ப்பாலை கொடுக்க வேண்டும். அதில் முதல் ஆறு மாதங்கள் தாயப்பாலை மட்டும் கொடுக்க வேண்டும். ஆறுமாதம் முடிந்தவுடன் ஏழாம் மாதத்தில் இருந்து தாய்ப்பாலுடன் வீட்டு உணவுகளைப் படிப்படியாக கொடுக்க வேண்டும். எந்த செயற்கை உணவுகளும் குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவை இல்லை. தாய்ப்பாலில் கிடைக்கின்ற சத்தாண உணவு வேறு எதிலும் கிடையாது என்றார். பின்னர் அவர், தாய்மார்களுக்கு சத்தாணவு உணவு பெட்டகங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மருத்துவர்கள் சரவணன், ராதாகிருஷ்ணன், அறிவுச்செல்வன் மற்றும் செவிலியர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். :
Next Story

