மழை வெள்ளத்தில் மூழ்கிய எம்.ஜி.ஆர். மார்க்கெட் – வியாபாரிகள் அவதி!

மழை வெள்ளத்தில் மூழ்கிய எம்.ஜி.ஆர். மார்க்கெட் – வியாபாரிகள் அவதி!
X
கோவை மாவட்டத்தில் கனமழையால் எம்.ஜி.ஆர். மார்க்கெட் பகுதியில் மழைநீர் பெரிதும் தேங்கி உள்ளது.
கோவை மாவட்டத்தில் வெளிவந்துள்ள ரெட் அலர்ட் எச்சரிக்கையையடுத்து, நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் எம்.ஜி.ஆர். மார்க்கெட் பகுதியில் மழைநீர் பெரிதும் தேங்கி உள்ளது. மார்க்கெட்டின் பெரும் பகுதி குளமாக மாற, விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட காய்கறிகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. பாதைகளில் நீர் தேங்கியதால் பொதுமக்களும், வியாபாரிகளும் கடைசேருவதற்கு சிரமம் ஏற்படுகிறது. பலமுறை கோரிக்கை வைத்தும், நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், மார்க்கெட் பகுதி சகதியுடன் காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மழைநீர் வடிகாலையை சீரமைத்து, நிரந்தர தீர்வு வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
Next Story