சி.ஐ.டி.யூ. மாநில நிர்வாகியின் மண்டை உடைப்பு

X
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா பள்ளபட்டியைச் சேர்ந்தவர் சேகர் (வயது 53). இவர் தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர் சங்க சி.ஐ.டி.யூ. மாநிலத் துணைப் பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர் தற்போது பள்ளபட்டியில் ரேஷன் கடையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் குணசேகரன் மனைவி பாக்கியலட்சுமி (49)க்கும் அடிக்கடி தகராறு வந்தது. ஏற்பட்டு இந்நிலையில் சேகர் மற்றும் அவரது மனைவி கனகவள்ளி ஆகியோர் சம்பவத்தன்று உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர். அப்போது சேகரின் மகள் சந்திரிகா (23) வீட்டில் குழந்தைகளுக்கு டியூசன் கொண்டு எடுத்துக் இருந்தார். அப்போது அங்கு வந்த பாக்கியலட்சுமி அவரு டன் தகராறு செய்தார். இதை அறிந்த சேகர் மற்றும் கனகவள்ளி ஆகி யோர் பாக்கிய லட்சுமியின் மகன் பகத்சிங்கிடம் தட்டிக் கேட்டனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு பகத்சிங் அங்கு இருந்த கம்பை எடுத்து சேகரின் மண்டையில் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த நிலக்கோட்டை சேகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டார். அதேபோன்று கனகவள்ளியும், சேகரும் பாக்கியலட்சுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பாக்கியலட்சுமி காயமடைந்து நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளார். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சவட முத்துவிடம் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story

