திருமண மண்டபத்திற்கான பூமி பூஜை

X
கவசனம்பட்டி ஊராட்சியில் மத்திய நிதிக்குழு மானிய நிதியில் ரூ.80லட்சம் மதிப்பில் கட்டப்படும் திருமண மண்டபத்திற்கான பூமி பூஜையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார். அதன்பின்னர் மாநில நிதிக்குழு மாநியம் 2025 நிதியில் 24லட்சத்து 94ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு நியாயவிலைக்கடைகளை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கசவனம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பூங்கானியம்மன் கோவில் வளாகத்தில் மத்திய நிதிக்குழு மானிய நிதி 2025-26 ரூ.80லட்சம் மதிப்பில் கட்டப்படும் சமுதாயகூடத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது. ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தார். அதன்பின்னர் கசவன்பட்டியில் மாநில நிதிக்குழு மானியம் 2024-25 நிதி 12.47லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட -2 புதிய நியாயவிலைக்கடையையும், குரும்பபட்டியில் கட்டப்பட்ட புதிய நியாயவிலைக்கடையையு; ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் திறந்து வைத்துபொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
Next Story

