அதிநவீன புதிய காவல்நிலையத்தை திறந்து வைத்த எம் எல் ஏ

X
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய வளாகத்தில் 30ஆயிரம் சதுர அடியில் மூன்று தளங்கள் கொண்ட 18 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் போக்குவரத்து காவல்பிரிவு, குற்றப்பிரிவு, சட்டம் ஒழுங்குப்பிரிவு மற்றும் காவல்துறை சார்ந்த பல்வேறு பிரிவுகள் அடங்கிய அதிநவீன புதிய காவல்நிலையத்தை சென்னை கொளத்தூரில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் பேருந்து நிலையத்தில் குத்துவிளக்கேற்றி கட்டிடத்தை திறந்துவைத்தார். இதில் பள்ளிக்கரணை துணை ஆணையாளர் கார்த்திகேயன், காட்டாங்கொளத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன்,துணைத் தலைவர் A.V.M. இளங்கோவன்,சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும அதிகாரி பால் பிரின்ஸி ராஜ்குமார்,ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்திக் ,ஒன்றிய கவுன்சிலர்கள்,வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன்,காவல்துறை அதிகாரிகள்,அரசு அலுவலர்கள்,கழக நிர்வாகிகள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Next Story

