கவின் பெற்றோரை காமராஜரின் பேத்தி ஆறுதல்!

கவின் பெற்றோரை காமராஜரின் பேத்தி ஆறுதல்!
X
ஆணவக் கொலை தடுப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று காமராஜரின் பேத்தி கமலிக்கா காமராஜர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை சந்தித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர் பெருந்தலைவர் காமராஜரின் பேத்தி கமலிக்கா காமராஜர் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் தெரிவிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்களம் கிராமத்தைச் சேர்ந்த, சென்னையில் ஐ.டி. துறையில் பணியாற்றி வந்த இளம் தொழில்நுட்ப நிபுணர் கவின் என்ற இளைஞர், ஜாதி வெறியால் இழைக்கப்பட்ட கொடூரமான ஆணவப் படுகொலையின் பலியாகியிருப்பது வேதனையும், நம்மை மனிதநேயக் கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் நிகழ்வாகும். இது ஒரு இளம் உயிரின் நம்பிக்கையின் கொலை மட்டுமல்ல... தமிழ்நாட்டில் ஒவ்வொரு காதலுக்கும், ஒவ்வொரு ஜாதி தாண்டிய உறவுக்கும் உயிர்பலி கேட்கும் கொடூரமான சமூக வியாதியின் வெளிப்பாடாகும். இத்தகைய துயரம் கொண்ட நிகழ்வுகள் இனி நிகழாமல் இருக்க, தமிழ்நாடு அரசு ஒரு தனி "ஆணவக் கொலை தடுப்பு சட்டம்” கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன். இன்றைய கவினுக்கு நீதியோடு நியாயமும் கிடைக்க வேண்டும். நாளைய கவின்கள் உயிரோடிருக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் பொறுப்பாகும் என்று தெரிவித்தார்.
Next Story