கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் மர்ம நபர் தற்கொலை – போலீசார் விசாரணை !

கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் மர்ம நபர் தற்கொலை – போலீசார் விசாரணை !
X
கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு சுமார் 11 மணி நேரத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல் நிலையத்துக்குள் நுழைந்தார். பின்னர், முதலாவது மாடியில் உள்ள க்ரைம் உதவி ஆய்வாளர் அறைக்குச் சென்று அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து காலை நேரத்தில் பணிக்கு வந்த போலீசாரால் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் தற்போது சாட்சிகள் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்த நபர் யார்? என்ன காரணத்தால் இந்த கடுமையான முடிவை எடுத்தார்? என்பதனைத் தெரிந்து கொள்ள, போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்துக்குப் பின்னர் துணை ஆணையர் கார்த்திகேயன் நேரில் வருகை புரிந்து விசாரணைகளை கண்காணித்தார்.
Next Story