தண்ணீர் இன்றி தவிக்கும் கலங்கள் பகுதி மக்கள் – உலர்ந்த குழாய்களை கண்டித்து போராட்டம் எச்சரிக்கை!

X
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கலங்கள் ஊராட்சியின் தென்றல் நகர் பகுதியில், கடந்த 10 ஆண்டுகளாக குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் கடும் அவலத்தில் உள்ளனர். குடிநீர் குழாய்கள் மற்றும் தொட்டிகள் இல்லாததால், மக்கள் தினமும் 5 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்திற்குச் சென்று தண்ணீர் எடுக்கின்றனர். பலமுறை மனுக்கள் அளித்து போராட்டம் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில், இன்று மக்கள் காலி குடங்களுடன் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். “உடனடியாக குடிநீர் குழாய் அமைக்கப்படவில்லை என்றால், கருப்பு கொடி கட்டி, குடும்ப அட்டைகளை சாலையில் வீசி போராட்டத்தில் ஈடுபடுவோம்” என அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். உடனடி நடவடிக்கை எடுக்க அரசு முன்வரவேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
Next Story

