பெண் பயணியுடன் தகராறில் ஈடுபட்ட நடத்துனர் – கருமத்தம்பட்டியில் பொதுமக்கள் போராட்டம்!

X
திருப்பூருக்கு சென்ற ABC தனியார் பேருந்தில், கருமத்தம்பட்டிக்கு பயண சீட்டு கேட்ட பெண் பயணியிடம், நடத்துனர் தகாத வார்த்தையில் திட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோமனூர் அருகேயுள்ள செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த பெண் தனது கணவர் மற்றும் கை குழந்தையுடன் கோவை மத்திய பேருந்து நிலையத்தில் ஏறியிருந்தார். கருமத்தம்பட்டிக்கு நிற்குமா என கேட்டதற்குப் பதிலாக, நடத்துனர் மோசமான வார்த்தைகளால் திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து பெண் தனது குடும்பத்துடன் மற்றொரு பேருந்தில் வீடு திரும்பியுள்ளார். இதற்கிடையில், சம்பவம் அறிந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து, அந்த தனியார் பேருந்தை கருமத்தம்பட்டி நான்கு ரோடு சந்திப்பில் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பேருந்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

