திருச்செந்தூர் துர்க்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பூஜை

X
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் தெருவில் ஸ்ரீ துர்க்கா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் ஆடித்திருவிழா வெகுவிமர்சையாக நடந்து வருகிறது. இதேபோல் இந்த ஆண்டு ஆடித்திருவிழா கடந்த ஜூலை 27ம் தேதி துவங்கி ஆக.8ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான நேற்று திருமால்பூஜை நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு பொங்கலிடுதலும், காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும், மாலை 4.30 மணிக்கு சிறப்பு ராகு கால பூஜை தீபாராதனையும், இரவு 8 மணிக்கு பால்குடம் எடுத்து வருதலும் நடந்தது. அதனைத்தொடர்ந்து அபிஷேகமும், இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று (6ம் தேதி) அதிகாலை 2 மணிக்கு படைப்பு தீபாராதனை நடந்தது. காலை 7 மணிக்கு அன்னதானம் வழங்குதலும் நடக்கிறது. ஆக.8ம் தேதி வரலெட்சுமி நோன்பு அன்று மாலை 6 மணிக்கு அம்பாளுக்கு வரலெட்சுமி அலங்கார மகா தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Next Story

