தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் புஷ்பாஞ்சலி பூஜை

X
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் ஆடி 3-வது செவ்வாய்க் கிழமையை முன்னிட்டு மாரியம்மனுக்கு காலை 7 மணிக்கு புஷ்ப பாவாடை அலங்காரமும், மதியம் 1 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாரணையும் நடந்தது. மாலை 4 மணிக்கு நவ கன்னிகா பூஜையுடன், அம்மனுக்கு பல வகையான பூக்களுடன் புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு வளையல், குங்குமம், மஞ்சள் கயிறு மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. பூஜைகளை கோவில் பட்டர்கள் சிவா மற்றும் குரு ஆகியோர் நடத்தினர். நிகழ்ச்சியில் கோவில் தக்கார் தமிழ்செல்வி, செயல் அலுவலர் ராதா, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா அறிவழகன், முன்னாள் அறங்காவலர் மகாராஜன், வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உஷா தேவி சண்முகசுந்தரம், மணிகண்டன் கோபால் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

