ஓசூரில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி.

ஓசூரில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி.
X
ஓசூரில் தாய்ப்பால் வார விழிப்புணர்வு பேரணி.
உலக தாய்ப்பால் வாரம் நாளை வரை அனு சரிக்கப்படுகிறது. இதை ஒட்டி தாய்ப்பால் கொடுப்பதன் முக்கி யத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று ஓசூர் குணம் மருத்துவமனையின் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மகப்பேறு டாக்டர்கள் வனிதா, கவிதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
Next Story