கரூர்- நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம்.

கரூர்- நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம்.
கரூர்- நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம். நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கரூர் தாந்தோணி மலை பகுதியில் செயல்படும் அரசு கலை அறிவியல் கல்லூரி வாயில் முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக கரூர் கிளை தலைவர் பிரபாகரன் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து வாயில் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் முனைவர் பார்த்திபன் முன்னிலை வகித்து போராட்டத்தை நடத்தினர். கல்லூரியில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். போராட்டத்தின் போது,பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும். பேராசிரியர் பணி மேம்பாட்டினை விரைந்து வழங்கிட வேண்டும். கல்லூரி பேராசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு நேர்மையான முறையில் விரைவில் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story